பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 159

கின்றன. ஏனையவற்றுள், சிற்சிலவே சிறப்பிக்கப் படும், திருமும்மணிக்கோவைக்கண் ஞான சம்பந் தரின் செயல்வகை சிலவற்றை யழகுறக் கூறுவர்.

அரிசினக் கடகரி யதுபட வுரித்த படர்சடைக் கடவுள்தன் திருவரு ளதனால் பிறந்தது, கழுமல மென்னும் கடிநக ரதுவே: வளர்ந்தது, தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு பூங்குழல் மாதிடு போனக முண்டே, பெற்றது, குழகனைப் பாடிக் கோலக்காப் புக்கு அழகுடைச் செம்பொற் றாள மவையே; தீர்த்தது, தாதமல் மருகல் சடையனைப் பாடிப் பேதுறு பெண்ணின் கணவனை விடமே; - அடைத்தது. அரைசோ டிசையா வணிமறைக் காட்டுக் குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே; ஏறிற்று, அத்தியுமாவும் தவிர அறத்துறை முத்தின் சிவிகை முன்னாள் பெற்றே; - பாடிற்று, அருமறை யோத்தூர் ஆண்பனை யதனைப் பெருநிற மெய்தும் பெண்பனை யாவே, - கொண்டது, பூவிடு மதுவில் பொறிவண் டுழலும் ஆவடு துறையில் பொன்னா யிரமே; கண்டது, உறியொடு பீலி யொருகையிற் கொள்ளும் பறிதலைச் சமணர் பல்கழு மிசையே; - நீத்தது, அவிழ்ச்சுவை யேயறிந் தரனடி பரவும் தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே; - நினைந்தது, அள்ளல் பழனக் கொள்ளம் பூதூர் இக்கரை ஓடம் அக்கரைச் செலவே, மிக்கவர்