பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 161

“பூவார் திருநுதல்மேல் பொற்கட்டி இட்டொளிரக் கோவாக் குதலை சிலம்பரற்ற - ஒவாது அழுவான் பசித்தான் என்று ஆங்கு இறைவன் காட்டத் தொழுவான். துயர் தீர்க்கும் தோகை - வழுவாமே முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன் அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத் திரளாகி முன்நின்ற செம்மல்.’ *

என்று பாடுகின்றார்.

உலகவாழ்வில் ஈடுபட்டு இன்ப துன்பங்களால் மலம் நீங்குதற்குரிய பக்குவமுற்று இறைவன் திருவருட்பேற்றுக்கு இலக்காவது உயிர்த்தொகை கட்கு இயல்பு. அவ்வாறின்றி, நம் சம்பந்தப்பெருமான் குழவிப் பருவத்திலேயே ஞானம் கைவரப்பெற்றது மிக மிக அரிய செயலாகும். அவ்வருமையால், பெரியரும் அரியருமாய் விளங்கும் அவரது பெருந் தகைமை அறிந்து வழிபடுவதும் அரிதாக இருக்க, எனக்கு அது எளிதாக வந்துவிட்டது என்று மகிழ்ச்சி சிறக்கும் நம்பிகள், திருவந்தாதியில்.

“எளிவந்தவா எழில்பூவரை கொண்மணித் தார் அழுங்கத் துளிவந்த கண்பிசைந் தேங்கலும் எங்கள்

. அரன்துணையாம் கிளிவந்த சொல்லி பொற்கிண்ணத்தில் ஞானவமிர்தளித்த அளிவந்த பூங்குஞ்சி இன்சொல் சிறுக்கன்றன் ஆரருளே’ என்றும், திருச்சண்பை விருத்தத்தில்

த.செ.-11