பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 163

மென்று பொற்றாளம் தந்தார் என்று கூறுகின்றார். நம்பியாரூரர், “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கும் உலகவர்முன் தாளமீந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளன்” என்று அருளியிருப்பது நாம் அனைவரும் தெரிந்த செய்தி, இவர் கூறுவதைக் காண்மின்: . .

“கண்ணார் திருநுதலான் கோலக்காவிற் கரநொடியால் பண்ணார் தரப்பாடு சண்பையர்கோன் பாணி

நொந்திடுமென்று எண்ணார் எழுத்தஞ்சும் இட்ட பொற்றாளங்கள்

ஈயக்கண்டும் மண்ணார் சிலர் சண்பைநாதனை யேத்தார் வருந்துவதே”

என்று பாடுகின்றார். முத்துச் சிவிகை பெற்ற செய்தி யும், ஆவடு துறையுள் பொன் ஆயிரம் பெற்றதும் பரவப்படுகின்றன.

திருமருகலில் கணவன் விடந்தீண்டியதால் இறந்துபடக் கண்டு வருந்திய வணிகமகள் பொருட்டு நம் சம்பந்தர் அவ் விடம்தீர்த்து அவள் வருத்தம் போக்கிய செய்தி நம்பியாண்டார் நம்பிகளால் பல விடங்களில் பாராட்டப்படுகிறது.

“வயலார் மருகல் பதிதன்னில் வாளரவால் கடியுண்டு

அயலா விழுந்த அவனுக் கிரங்கி அறிவழிந்த கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப் புயலார் தருகையினான் என்னத் தோன்றும் புண்ணியமே”

என்று திருவந்தாதியும்,