பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 165

-"மற்றிவனே பெண்ணிரக்கம் அன்றே, பிறைநுதலிர், மாகாணத்தின் நண்ணு கடுவிடத்தால் நாட்சென்று - விண்ணுற்ற ஆருயிரை மீட்டன்று அவனை அணிமருகல் ஊரறிய வைத்தது எனவுரைப்பார்.”

இவ்வாறே, நம் சம்பந்தப்பெருமான் திருமயிலை யில் என்பைப் பெண்ணாக்கிய அருட்செயலைத் திருவருணைக் கலம்பகமுடையார் மிக்க நயமுறக கூறிப் பாராட்டுகின்றார். ஒத்த அன்பால் பிணிக்கப் பட்ட ஒருவனும் ஒருத்தியும் இல்லிருந்து நல்லறம் புரிந்து வருகின்றனர். வருங்கால், அவனுக்குத் தன் கல்வியறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு வேட்கை மிகுகின்றது. நல்லாசிரியர் ஒருவர் சேய்மையில் இருப்பதை அறிகின்றான். அவர்பாற் செல்லவும் விரும்புகின்றான். கல்வி குறித்துப் பிரியக் கருதும் கருத்தைத் தன் மனைக்கிழத்திக்குத் தெரிவிக் கின்றான். அவள் சீரிய கூரிய அறிவுநலம் படைத் தவள். ஆதலால், அவள் அவனை நோக்கி,

“ஆரும் விரும்பிய கல்விமேல் ஆசையுமக்குளதாயிடின்

பாருள வென்பொருபாவையாய் பாடிய பாவலர் போலவே

நீரு மருந்தமிழ் செப்பிடும் நீர்மையறிந்திவ னேகுவீர் மேரு நெடுஞ்சிலையத்தனார் விறருணாபுரி வெற்பரே”

(செய்.20)

என்று கூறுபவள். தன் பிரிவாற்றாமையும், pp75 உயிர் நீங்கிய வழி மீட்டும் அதனை வருவித்துப்