பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இ ஒளவை சு. துரைசாமி

பொருந்துவிக்கும் அருட்கவி வேண்டும் என்பதை வற்புறுத்தலும், ஞானசம்பந்தர் என்பைப் பெண் ணாக்கிய நலமும் தோன்ற “என்பொருபாவையாய் பாடிய பாவலர் போலவே நீரும் அருந்தமிழ் செப்பிடும் நீர்மை யறிந்திவண் ஏகுவீர்” என்று உரைக்கின்றாள். - - இனி, நம் ஞானசம்பந்தப் பெருந்தகை பாடி யருளிய திருப்பதிகம் 16000 என்று நம்பியாண்டார் நம்பிகள் குறிக்கின்றார்கள். ஆளுடைய பிள்ளையர் திருவந்தாதியில், r

“நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைக பகரங் கழல வனைப்பதினாறா யிரம்பதிகம் மகரம் கிளர்கடல் வையம் துயர்கெட வாய்மொழிந்த நிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீணிலத்தே” என்று ஒதுகின்றார். இக்கருத்தே, திருத்தொகையில்,

. - “-மொய்த்தொளிசேர் கொச்சைச் சதுரந்தன் கோமானைத் தான்செய்த பச்சைப் பதிகத்துடன்பதினா றாயிரம்பா வித்துப் பொருளை விளைக்க வலபெருமான்” என்றும், திருவுலாமாலையில்,

“பன்னு தமிழ்ப் பதினாயிரம் நற்பனுவல் மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன வந்தங் கவதரித்த வள்ளல்” -

என்றும் எடுத்தோதி வற்புறுத்துகின்றார்.