பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ. 167

இப்பதிகங்களின் வகைகளையும் தம்முடைய பிரபந்தங்களில் நம்பிகள் காட்டியிருக்கின்றார். இசைக்குரிய பண்முறையே வரும் பதிகங்களைப் பதிகமென்றும், திருப்பாசுரத்தைப் பாசுரம் பல்பத்து என்றும், ஏனைச் சிறப்புடைய இயல்பமைந்தவற்றை திருவிராகம், திருவிருக்குக்குறள், யாழ்.மூரி, சக்கர மாற்று, ஈரடி முக்கால் என்றும் விரித்துரைக்கின்றார். திருவுலாமாலையில்,

“எப்பொழுதும் நீக்கரிய இன்பத் திராக மிருக்குக்குறள் நோக்கரிய பாசுரம்பல் பத்தோடும் - ஆக்கரிய யாழ்.மூரி சக்கரமாற் றீரடி முக்காலும் பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி உரைப்பமரும் பல்புகழால் ஓங்க வுமைகோனைத் திருப்பதிகம் பாடவல்ல சேயை” -

என்று உரைப்பது காண்க.

இனி, ஞானசம்பந்தர் தம்முடைய திருப்பதி கத்துள் பாராட்டிய சைவப்பெருமக்கள் இவர் என்றும், அவர்களை இவ்விவ்வகையில் பாராட்டி யிருக்கின்றார் என்றும் நம்பியாண்டார் நம்பிகள் ஆராய்ந்து கூறுகின்றார். இப்பெருமக்களுள் ஞான சம்பந்தரை நினைக்கும்போதே பாண்டிமாதேவியார் தாம் நம் மனக்கண்ணே முந்து நிற்பவர். நம்பிகளும் அம்முறையே திருத்தொகையின்கண், -