பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


168 ஒளவை சு.துரைசாமி

“பத்திச் சிவமென்று பாண்டிமா தேவியொடும்

கொற்றக் கதிர்வேல் குலச்சிறையும் கொண்டாடும் அற்றைப் பொழுதத்து அமணரிடு வெந்தீயைப் பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவலான்” என்றும், முருகநாயனார், திருநீலநக்க நாயனார் என்ற இவர் தம் சிறப்பை, - -

“வர்த்தமானிசர் கழல் வணங்கி வாழ்முருகன் பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்; அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்” என்றும் உரைக்கின்றார். திருவந்தாதியில்,

ஏந்தும் உலகுறுவீர் எழில்நீல நக்கற்கும் இன்பப் பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போக’

- - மார்ப்பைக் காந்தும் கனலில் குளிர்படுத்துக் கடற் கூடலின்வாய் வேந்தின் துயர் தவிர்த்தானை யெப்போதும் விரும்புமினே” என்று தொகுத் தோதுகின்றார்.

இங்ஙனம், ஞானசம்பந்தரால் பாராட்டப்பட்ட பெருமக்களை நம்பிகள் எடுத்தோதி வந்தாரே; அவரால் திருச்செங்காட்டாங்குடிப் பதிகத்துள் பாசுரந்தோறும் பாராட்டப்பெற்ற சிறுத்தொண் டரைப் பாடிற்றிலரே என்று நினைக்கலாம். அச் சிறுத்தொண்டற்கு நம் ஞானசம்பந்தர் ஒரு திருப் பதிகம் முழுதும் அமைத்த அமைதி நலத்தை நன்கு ஆராய்ந்து ஒரு சிறந்த கருத்தினை நாம் அறிந் தொழுகுமாறு நம்பியாண்டார் நவில்கின்றார்.