பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{6 ஆ ஒளவை சு. துரைசாமி

மொழி உடம்பு மூன்றின் அசைவு அசைவின்மை களால் வினைகள் தோன்றுகின்றன. வினையில்லாத உயிரே உலகில் இல்லை. ஒவ்வொரு வினைக்கும் பயன் உண்டு. இன்பம் பயப்பது நல்வினை; துன்பம் தருவது தீவினை. நல்வினை செய்தோர் இன்பத் துக்கும் தீவினை செய்தோர் துன்பத்துக்கும் உரியராவர். வினை உயிரோ உணர்வோ இல்லாத தாகலின், அது தானே சென்று வினை செய்தவனுக்கு உரிய பயனை நல்குவதில்லை. வினை செய் தோனுக்கு வினைப் பயன் அவனையே அடைதற் குரிய தொழிலைச் செய்யும் வகையில் தெய்வங்கள் பணிபுரிகின்றன. அதுபற்றியே அவற்றைப் “பால் வரை தெய்வம்” என்று சான்றோர் குறிக்கின்றனர். செய்யப்படும் வினைப்பயன்களுக்கேற்ப உயிர்கட்கு இம்மை மறுமை வீடுபேறு என மூவகையுலகுகள் காட்டப்படுகின்றன. வினை செய்தற்குரிய உலகம் நாம் வாழும் மண்ணுலகம். நல்வினைப் பயனை நுகர்தற்குரிய மறுமையுலகம் நிரயம் என்றும், வினைத் தொடர்பினின்றும் அறவே நீங்கி விளங்கும் அறிவுடைச் சான்றோர்க்குரியது வீடுபேறு என்றும் பழந்தமிழர் கருதினர்.

வினை தோன்றும்போதே அதன் பயனும் உடன் தோன்றுகிறது. வினை முடிவில் அதன் முழுத்த பயன் உருவாகி வினைசெய்த ஒருவனை அடையும் நிலையை எய்துகிறது. அவன் அப்பயனை நுகரும்வரை அவனுக்கு அஃது ஊழ்கனிபோல்