பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இ ஒளவை சு. துரைசாமி

அரசாள்வர் ஆணைநமதே என்றும் அருளுவதைக் காணுந்தோறும் நமக்கு வியப்பும் இறும்பூதும் உண்டாகின்றனவன்றோ?.

நனி பள்ளிக்குப் போம்போது ஞானசம்பந்தர், “நாம் அத்தன் பியன்மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பாசுரம் பத்தும் ஒதுபவர் வினைகெடுவர்; அத்ற்கு நமது ஆணை” யென்பது காணும்போது, ‘இச்சிறுபிள்ளை தன் தந்தை தோளில் இருந்து கொண்டு சொல்லும் இறுமாப்பு என்ன்ே’ என்றெழும் நினைவை நம் சேக்கிழார்பெருமான் உடனே நம்மைத் தெருட்டிப் பணிவிக்கின்றார். தந்தை தோள்மேல் இருந்தார் என்றது பரமன் திருவடிக் கீழ் இருந்தார் என்பதை யுணர்த்தும்; திருவடிக் கீழ் எனவே, அவர் திருமுடிமேல் பரமன் திருவடியிருப்பது பெறப்படும், படவே, அவர் மனத்தே தம்முடியில் திருவடியிருப்பது கருதி நிற்கின்றாராம்; சேக்கிழார், “மாதவம் செய்தாதை யார் வந்தெடுத்துத் தோளின்மேல் வைத்துக்கொள்ள, நாதர்கழல தம்முடிமேல் கொண்ட கருத்துடன் போந்தார் ஞான முண்டார்” (ஞானசம்.பு. 113) என்றும், திருநனிபள்ளி திருப்பதிகத் திருக்கடைக் காப்பில் ‘ஆணை நமதே’ என்றதை வியந்து, “நாரியோர் பாகர் வைகும் நனிபள்ளியுள்குவார்தம், பேரிடர் கெடுதற்கானை நமதெனும் பெருமை வைத்தார்” (திருஞான பு: 1) என்றும் உரைக்கின்றார்.

இவ்வாறு “ஆணைநமதே” என்னும் பெருமை மொழியை நன்கு கண்டு இறும்பூதெய்திய நம்பி