பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 173

யாண்டார், திருத்தொகையில், ‘முத்திப் பகவன் முதல்வன் திருவடியை, “அத்திக்கும் பத்தர் எதிர் ஆணை. நமதென்னவலான்” என்று பாராட்டியுரைக் கின்றார்.

இங்ஙனம் அடியாரைப் பற்றும் வினைகளைக் கெடுத்தற்கும் கோள்முதலியவற்றால் எய்தும் தீமை கெடுதற்கும் ஆணையிட்டுக் கூறும் பெருமை படைத்த ஞானசம்பந்தப் பெருந்தகையாரை வழி படுவதும் சிவ வழிபாடே என்றும், அதனாற் பெறும் பயனும் சிவ போகமே என்றும் நம்பியாண்டார் நம்பி - கூறுகின்றார். அப்பகுதியைத் தொடங்குவதற்கு முன் அகத்திணை நெறியில் அவரை நம்பிகள் பாடி யிருக்கும் திறம் சிறிது கூறுகின்றோம்.

ஞானசம்பந்தரைப் பாராட்டி நம்பியாண்டார் நம்பிகள் பாடிய புகழ் நூல்களில் பெரும்பான்மை யான பாட்டுகள் அகத்திணை எழிலும் விரவி யிருக்கின்றன. அவற்றை, திணையும் துறையுமாக வகுத்து ஆராய்தற்குக் காலம் இன்மையின் இரண் டொன்றே காட்ட முயல்கின்றோம்.

ஒருத்தி ஒரு தலைமகனைக் கண்டு அவன் நட்புப் பெற்றுக் களவொழுக்கம் பூண்டு ஒழுகு கின்றாள். அவள் அவனை இடையறாது கூடியிருப்ப தற்கு இயலாமையால் மேனி வேறுபடுகின்றாள். அவ்வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகிறது. அதனை அவள் தோழிக்குக் குறிப்பிக்க, அவள் செவிலிக்குத் தலைவிக்கும் தலைவனுக்கும் உண்டான தொடர்