பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இ. ஒளவை சு. துரைசாமி

பினை உரைக்கின்றாள். இது கள வொழுக்கத்தில் அறத்தொடு நிலையென்று வழங்கும். தலைவி புனத்தே இருக்குங்கால் யானையொன்று போந்து அச்சுறுத்துகிறது. அதுகண்டு தலைவி அலமரு கின்றாள்; அப்போது தலைமகன் போந்து அவ் யானையை வெருட்டியோட்டி அவளைக் காக்கின் றான். அந்நன்றி மறவாமல் அவள் அவன்பால் அன்புற்று மெலிகின்றாள் என்ற இக் கருத்தை, அத் தோழி உரைக்கத் தொடங்கி, -

“மன்னங்கனை செந்தமிழாகரன் வெற்பில் வந்தொருவர் அன்னங்கள் அஞ்சன்மின்என்று, அவ்வேழத் -

திடைவிலங்கிப் பொன்.அங்கு அலைசாவகை எடுத்தாற்கு இவள்யூண்

- அழுந்தி இன்னந் தழும்புளவாம் பெரும்பாலும் அவ்வேந்தலுக்கே”

என்று உரைக்கின்றாள். இவ்வாறு அகனைந்திணை யொழுக்கமே பற்றி வருவன பல. -

மகளைப் பேதுறுவித்தான் என நற்றாய் ஏசல்

என்ற துறையில் நம்பியாண்டார் நம்பிகள் ஞான சம்பந்தப் பெருந்தகையைப் பிள்ளையென்ற நிலை யில் வைத்து அழகிய பாட்டொன்றைப் பாடு கின்றார்.

தனமலி கமலத் திருவெனும் செல்வி

விருப்பொடுந் திளைக்கும் வீயா இன்பத்து

ஆடக மாடம் நீடு தென்புகலிக்