பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 175

காமரு கவினார் கவுணியர் தலைவ பொற்பமர் தோள, நற்றமிழ் விரக, மலைமகள் புதல்வ, கலைபயில் நாவ, நினாது, பொங்கொளி மார்பில் தங்கியதிருநீறு ஆதரித் திறைஞ்சிய பேதையர் கையில் வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின் பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே” (கோவை. 10)

இதன்கண், “வெள்வளைவாங்கி” என்ற உடம்புநனி சுருங்கல்; “செம்பொன் கொடுத்தல்” என்றது. பசலை பாய்தல். பிள்ளைகளன்றிப் பெரியோர் வெள் வளைக்கு மாறாகச் செம்பொன் தாரார் என்பதும், பேதையார்க்குச் செம்பொன்னைத் தெரிந்தவர் கொடார்; சிறு பிள்ளைகள் அப்பொன்னின் அருமை தெரியாராதலின், அவர் தான் கொடுப்பர், நீ இவற்றைச் செய்தனையாதலின், “பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கென்னார்”. பிறர்க்கு என்றவிடத்து எச்சவும்மை தொக்கதாகக் கொள்ளின், எனக்கே யன்றிப் பிறர்க்கும் இது நன்கு தெரிந்துவிட்டது என்றாளாம். “பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே” என்றதன்கண், “பிறரெல்லாம் இவ்வாறு காரணம் காட்டிப் பிள்ளையென நின்னை யேசுகின்றனர்; யான் நீ பெரியன் என்றே பேணிப் பரவுகின்றேன்; நீ நின் மார்பின் மாலையைத்தந்து என் மகள்கொண்ட பேதுறவையைத் தீர்த்தருளவேண்டும்” எனத் தாய் தார் வேண்டிநிற்கும் நிலையும் தோற்றுவிக்கும் நயம் காண்மின். -