பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ஒளவை சு. துரைசாமி

அமுதுாறு நின்று திருப்பதிகம் பாட, திருக்கை அதற் கேற்பத் தாளம்போட, தம்மை மறந்து சிவனருளில் தோய்ந்து நிற்றலின் திருவடி அடி பெயர்த்துச் சிறு கூத்தாடத் தோன்றும் இன்பக் காட்சி நம் கண் முன் தோன்றுவது காண்மின்.

இவருடைய பாட்டுக்களில் அகப்பொருட்டுறை யில் இதுகாறும் எப்புலவராலும் காட்டப்படாத புதுப்புதுத் துறைகளும் கருத்துக்களும் பல்கியிருக் கின்றன. அவற்றை யெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டுவது வேண்டா கூறலாம். இவர் பாட்டுக்களை மட்டில் தனியே எடுத்து ஆராய்ந்து காண விரும்பு வோர்க்கு அவை பொருளாம்.

இனி, நம்பியாண்டார் நம்பிகள் ஞானசம்பந்தப் பெருமானைத் தனித்த முறையில் எடுத்தோதி நமக்கு அறிவுறுத்துவனவற்றைச் சிறிது கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்ளுகின்றேன்.

முதற்கண், ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருநாமத்தை ஒதுவதே வேண்டுவ தென்கின்றார். ஒருவன் பெற விரும்பும் டேறுகள் அனைத்தையும் பெறுதற்கு அதுவே வழியென்பார்,

உறவும் பொருளும் ஒண்போகமும் கல்வியும் கல்வியுற்ற துறவும் துறவிப் பயனும் எனக்குச் சுழிந்தபுனல் புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும்

- ததும்பும்வண்டின்நறவும் பொழில்எழில் காழியர்கோன் திருநாமங்களே”