பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 இ. ஒளவை சு. துரைசாமி

தார் நரகில் தளர்வரென்பதும் கூறி, பணியாதவரைப் புலையரென்று இழித்துரைப்பதும் காண்க.

இந்நிலையில் திருமாலும் அயனும் சிவபரம் பொருளின் திருவடியும் திருமுடியும் முறையே காண முயன்று அலமந்த செய்தியை நினைந்து, அவர் தாமும், நம் ஞானசம்பந்தர் திருவருளை நாடி யிருப்பின், அவர்கட்கு அவர் அவற்றைக் காட்டி யிருப்பாரென்பார்,

“நிலமேறிய மருப்பின் திருமாலும் நிலம்படைத்த குலமேறிய மலர்க் கோகனகத் தயனும்கொழிக்கும் சலமேறிய முடிதான் கண்டிலர் தந்தைகான அன்று நலமேறிய புகழ்ச்சம்பந்தன் காட்டிய நாதனையே’

என்று கூறுகின்றார்.

இவ்வாறு மாலும் அயனும் காண்பதற்கரிய பரமனைத் தாம் எளிதிற்கண்டு, அதனோடமையாது தந்தைக்கும் காட்டியருளிய அருளாளரான ஞான சம்பந்தப் பெருந்தகையைத் தாம் எளிதில் பற்றிப் பரவுதற்கு நேர்ந்த நேர் பாட்டினைத் தாமே வியந்து,

“செப்பிய என்ன தவமுயன்றேன் நல்ல செந்தமிழால் ஒப்புடை மாலைத் தமிழாகரனை உணர்வுடையோர் கற்புடை வாய்மொழி யேத்தும்படி கதறிட்டிவர மற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே’ என்று பாடி மகிழ்கின்றார். இம்மகிழ்ச்சி மிகுதியால், இனி ஞான சம்பந்தரை, யன்றிப் பிறரைப் பாடுதற்கு என் மனம் செல்லாது; ஆனைமேல் அம்பாரி கட்டிச்