பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 185

செல்லும் அரிய செல்வம் சிறந்த வாழ்வு தானே வந்தமைவதாயினும் அதனை வேண்டேன் என்று கூறுவாராய்,

உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலையுரிஞ்ச அகட்டிற் சொரிபால் தடநிறை கொச்சை வயத்தரசை தகட்டில் திகழ்மணிப் பூண்டமி ழாகரன் றன்னையல்லால் பகட்டிற் பொலியினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே”

என்று கூறுகிறார்.

இவ்வண்ணம் ஞானசம்பந்தர்பால் திண்ணிய அன்பராகுமிவர், இப்பாட்டின்கண் ஒருவரை யென்றது, சிவனடியாரல்லாத பிறர் ஒருவரையாகும் எனக்கொள்ளல் வேண்டும்; என்னை, திருநாவுக் கரசரைத் திருவேகாதசமாலை பாடிப் பரவியிருக் கின்றாராகலின். அல்லது உம் அவர் திருஞான சம்பந்தரொடு கூடியிருந்து படிக்காசு பெற்ற செய்தியை விதந்து, இவ்விரு பெருமக்களும் கூடி யிருந்த கூட்டத்தின் பயனே இன்றும் சைவவுலகு நிலை பெற்றிருத்தற்கு ஏதுவாயிற்றென்பார்,

பாடிய செந்தமிழாற் பழங்காசு பரிசில் பெற்ற

நீடிய சீர்த்திரு ஞானசம்பந்த னிறை புகழான்

ஏடியல்பூந் திருநாவுக் கரசோ டெழில் மிழலைக் கூடிய கூட்டத்தினா லுளதாய்த்திக் குவலயமே”

என்று ஒதுகின்றார்.