பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10

வினையுணர்வும் ஞானசம்பந்தரும்

வினைத்தொடர்புள்ள சொற்கள் இந்நாளில் எல்லாருடைய பேச்சிலும் எல்லாக் காலத்தும் காணப்படுகின்றன. கற்றவர் கல்லாதவர், செல்வர் வறியர், இளையர் முதியர், ஆடவர் மகளிர் ஆகிய யாவரும் இன்பம் துன்பம் என்ற இருவகைக் காலத்திலும் இவ்வினையைப் பற்றிய பேச்சுக்களை வழங்குகின்றனர். இன்பம் துன்பம் என்ற இரண்டின் நுகர்ச்சிக்குக் காரணம் நுகர்வோரது வினையே என்ற உணர்வு நன்கு வேரூன்றியிருக்கிறது. துன்பமும் ஒருவனைக்கண்டு ஆறுதல் கூறும் வேறொருவனும் “இது முன்னை வினையின்பயன்” என்று மொழிவது இயல்பாக இருக்கிறது.

தமிழ் நூல்களிலும் இவ்விணையுணர்வு நன்கு விளங்கித் தோன்றுகிறது. மிகப் பழையதாகிய தொல்காப்பியம் முதல் இன்று தோன்றும் திரைப் பாட்டுவரையில் எல்லாப்பாட்டுக்களிலும் உரை

இது கரந்தைத் தமிழ்ச்சங்க இருபத்தெட்டாம் ஆண்டு விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவாகும்.