பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 187

களிலும் வினைபற்றிய சொல்லும் சொற்றொடரும் பயின்று வருகின்றன. இந்நூல்களுள், வினைத்தொடர் பான மொழிகள், எல்லாவற்றிலும்விடத் தேவா ரத்தில் மாத்திரம் மிகுதியாகவும், தேவாரப் பெருமக்களுள் ஞானசம்பந்தர் திருப்பாட்டுக்களில் மிகப்பெரிதும் இடம்பெற்றுள்ளன. ஞானசம்பந்தர் திருப்பாட்டுக்கள் சுமார் 4200 உள்ளன; அவற்றுள், சுமார் 3600 திருப்பாட்டுக்களில் இவ்வினையுணர்வு பயின்று வருகின்றது.

இங்ஙனம், இவரது திருப்பாட்டுமட்டில் வினைத்தொடர்பான சொற்கள் பெறுவானேன்? இவர் போலும்பெரு மக்களின் அருட்பாடல்களில் அத்துணைப்பயில வழங்காமையின், இது பற்றிய பேச்சு, இவர்காலத்து ஓங்கிநின்றதாகல் வேண்டும். தேவாரத்துக்கு முன்னிருந்த நூல்களிலும், இத் துணைப் பெருவழக்குக் காணப்பட்டிலது. முன்னைய நூல்கள், இலக்கணம், இலக்கியம், சமயநூல் எனப் பகுக்கப்படும். இவற்றுள் இலக்கியங் களும் சமயநூல்களும் பிரிப்பின்றி ஒரு தன்மை யாகவே அமைந்திருக்கின்றன. நீதிநூல்களோ இடை இடையே சமயக் கருத்தும் கொண்டு நிலவுகின்றன.

இந்தியநாட்டு நூல்வரலாறு காண்பவர் வேதங் களே மிகப் பழைமை வாய்ந்தவை யென்கின்றனர். அவற்றில் மிகச் சிறிதாகவே வினையுணர்வு காணப் படுகிறது என்றும், வேத காலத்துக்குப் பின்னர் தான், இவ்வுணர்வு நாட்டில் பயில வழங்கிவருகிறது