பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ) ஒளவை சு. துரைசாமி

வகைகளில் மக்களின் அறிவும் முயற்சியும் பெரிதும் ஈடுபடுகின்றன. இடையீடும் இடையூறும் அவ் விரண்டின் எல்லையைக் கடந்து போகிறபோது சமயவுணர்வும் வழிபாடும் தோன்றுகின்றன. பெருமழை, மழையின்மை, கடுங்காற்று, கொடு விலங்கு, பெரும்பகை முதலியவற்றால் இடையூறு உண்டாகுமாயின் மக்கள் தெய்வ வழிபாட்டில் சிறந்து நிற்கின்றனர். பெருமழைக்கு வருந்திய மலையுறை குறவர், -

“மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்

மாரி யான்று மழைமேக் குயர்கெனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண் மாறிய உவகையர்” (புறம், 43) எனச் சான்றோர் குறிப்பது காண்க. செய்யும் வினை காரணமாகத் தோன்றும் சமய வழிபாடு, வினையின் தொடக்கத்தில் இடையூறு வாராமை கருதியும், இடையில் வந்த இடையூறு நீங்குவது கருதியும், முடிவில் வினைப்பயன் நல்கும் இன்பம் குறித்தும் நடைபெறுகிறது. - - மக்களுடைய வாழ்வை அகம் புறம் என இரண்டாக வகுத்து முறை செய்து கொண்டவர் பழந்தமிழர். அகம் என்பது தனியே இருந்து வாழ்க்கை நடத்தும் உடல் வளர்ச்சியும் ஒருங்கு பெற்ற ஒருவனும் ஒருத்தியும் ஒருவரையொருவர் தனித்துக் கொண்டு காதலுறவு கொண்டு உள்ளத்தால் ஒன்றுபட்டு மணம் செய்து கொண்டு