பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 189

விளக்கிக் கூறுகின்றது. பொருளதிகாரம், ஆண்மகன் ஒருவன், தன் ஆண்மை துணையாகக் கொண்டு செய்யும் பொருண்முயற்சியினை வினையென்று காட்டி, அச்செய்கை நிகழ்ச்சிகளையும் “வினை” யென்றே வழங்குகின்றது. “வினை.வயிற்பிரிந்தோன் மீண்டுவருகாலை, இடைச்சுரமருங்கிற்றவிர்தல் இல்லை, உள்ளம்போலவுற்றுழியுதவும், புள்ளியற் கலிமா வுடைமையான’ என வருதல் காண்க. பிற்காலச் சமய நூல்கள் வழங்கும் பொருளிலும் ஆசிரியர் தொல்காப்பியனார், இவ் வினையென்னும் சொல்லை,"வினையின் நீங்கி விளங்கிய அறிவின், முனைவன் கண்டது முதனூலாகும் என்ற நூற்பாவில் வழங்கியுள்ளார்.

சங்கவிலக்கியங்களுள், பதினெண் கீழ்க்கணக்கு களுள் தொகுக்கப்பட்ட சில வொழிய, ஏனையவும், தொகை நூல்களும் அகம், புறம் என இருவகை யாகும். அவற்றுட் புறப்பொருள் வழியாகிய புறநானூறு முதலியன வினையுணர்வைக் கூறு கின்றன. வினை, நல்வினையும் தீவினையும் என இருவகைத்தாய் முறையே இன்பமும் துன்பமும் பயக்குமென்பதனை வினையறிவு மிக்க புலவர். கூறுவர். ஆகவே, இன்பம் துன்பமும் பயக்குமென்ப தனை வினையறிவு மிக்க புலவர் கூறுவர் ஆகவே, இன்பம் பயக்கும் நல்வினையே மக்கள் விரும்பும் மாண்புடையதாகலின், அறிஞர், நல்வினையைச் செய்க என்று விதிப்பதும், தீவினையைச் செய்யற்க