பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ: 191

கூறுகின்றன. “வினை விளையச் செல்வம் விளைவது போல்” (திணைமா. 150-5 என வருவதும், பிறவும்

காண்க,

இருமையும் பயக்கும் நல்வினை செய்தற்கு

நல்லாற்றில் ஈட்டும் பொருளும், அதனைச் செய்தற் குரிய முயற்சியும் சிறந்து நிற்றலின், அவற்றைக் குறித்து ஆண்மக்கள் தம்வாழ்க்கைத் துணைவியரைப் பிரிந்தேகுதல் நலம் என்றும், அவர்செலவு வினை வயிற் செல்லும் செலவு என்றும் சான்றோர் விரியக் கூறியுள்ளனர். “வினையே ஆடவர்க் குயிரே” (குறுந். 135), “சேறும் நாம் எனச் சொல்லச் சேயிழை, நன்றெனப் புரிந்தோய் நன்று செய்தனையே, செயல்படுமனத்தர் செய்பொருட்டு அகல்வராடவர் அதுவதன் பண்பே” (நற். 24, ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச், செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு, அம்மா வரிவையும் வருமோ, எம்மை புய்த்தியோ வுரைத்திசினெஞ்சே” (குறுந். 63) என வருவன இதற்குப் போதிய சான்றாகும்.

இனி, ஆசிரியர் காவட்டனார் என்பவர், “வசையும் நிற்கும் இசையும் நிற்கும். அதனால், வசைநீக்கி யிசைவேண்டியும், நசைவேண்டாது நன்றுமொழிந்தும்” வாழ்தல்வேண்டும் (புறம் 359) என அந்துவன் கீரன் என்று தலைவற்கும், ஆசிரியர் குடபுலவியனார், “செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,