பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


192 இ. ஒளவை சு. துரைசாமி

ஒருநீ யாகல்வேண்டினும் சிறந்த, நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன், தகுதி கேளினி மிகுதியாள (புறம்.18) எனப் பாண்டியன் நெடுஞ்செழியற்கும் அறிவுறுத்தியனவும் பிறவும், “அந்தோ வினையே’ என்று அழுங்கி மயங்காது செய்வினையைச் சிறக்க அச்சமின்றிச் செய்யவேண்டும் என்பதையே வலி யுறுத்தி விளக்குகின்றன. ஒரொருகால், ‘நன்றி விளைவும் தீதொடும் வரும்” (நற். 188) எனினும், அத்தீதுகண்டு அஞ்சாது வினைசெய்தல் வேண்டும்; ஒருவினையைச் செய்யுமிடத்து, இடும்பையும் இடுக்கணும் வந்து தீதுசெய்யுமாயினும், “வினையே யாடவர்க்குயிர்’, ‘வினைக் குறை தீர்ந்தாரிற் lர்ந்தன்றுலகு”, “சுடச்சுடரும் பொன்போல் ஒளி விடும் துன்பம் சுடச்சுட நோற்கிற்பவற்கு’, “ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்றெல்லாம் சான்றோர் கூறியபொருளுரைகள், அவற்றிற் கஞ்சு தலும், வினையில்மடங்குதலும் கூடா என்பதனையே வற்புறுத்துகின்றன. -

இக்கூறியவாற்றால், வினையெனச் சான்றோர் எடுத்துக் கூறியது யாவரும் மடியின்றிச் செய்தற்குரிய இம்மையில் இசையும் மறுமையில் பேரின்பமும் பயக்கும் நல்வினையே யென்றும், அதனால், நலம் பயக்கும் நல்வினையே பண்டைச் சான்றோரால் நல்வினை, நன்று ஆள்வினை, வினையெனப் பல்லாற் றானும் விதந்து கூறப்பட்டதென்றும் அறிகின்றோம். “யாம்செய் தொல்வினைக் கெவன்பேதுற்றனை” (நற்.