பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


196 இ ஒளவை சு. துரைசாமி

செலவந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்” (மாகறல்) என்பன போலவரும் திருமொழிகள் வினைவகையினையும், அவற்றின் வலியின்மையை யும் உணர்த்துவனவாகும்.

வினைகளே உயிர்கள் நுகரும் இன்பதுன்பங் கட்கு ஏது வாகலின், ஆண்டவன் வேண்டப்படான் என்று கூறிய சமயக் கணக்கர் பலர் அக்காலத் திருந்தனர் என முன்பே கூறினோம்; அவர்களைத் தெருட்டுவார் போலச் சிலபல வுரைகள் பிள்ளையார் அருளியுள்ளார்.

“நல்குரவும் இன்பமும் நலங்களவையாகி

வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிடமென்பர்,

மல்குமடி யார்கள் படியார விசைபாடிச் -

செல்வமறை யோருறை திருப்புகலியாமே”

என்றும்,

“துன்பானைத் துன்பம்துடைத் தருளாக்கிய

இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்

அன்பானை யணிபொழிற் காழிநகர் மேய நம்பானை நண்ணவல்லார் வினை நாசமே”

என்றும், இவ்வாறு பலவும் வருவன உள. வினைகள் அறிவில் பொருள்களாகலின், இவை தம்பயனைக் கொண்டு வினை முதலை நுகர்விக்கும் திறமுடைய அல்லவாகலின், அது செய்தற்குரிய அறிவுடைப் பொருள் ஆண்டவனேயென்றும், அதனால், அவனன்றி வினைமுதல் வினைப்பயனை நுகர்தல்