பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 199

கமழுகின்றதென்பதனை, “மடையில் வாளைபாய, மாதரார் குடைதலால் நெய்யொடு குங்குமம் நிறைந்துநறுமணம் கமழும் பொய்கை” என்பதனால் குறித்தருளுகின்றனர்.

அருள் நினைந்து பரவிப்பாடியாடும் அடியார் உள்ளம் அவன் அருண்மணமே கமழ்தற்குரிய அவனது அருளை, அருள் நிலையை அடுத்த பாசுரத்தில்,

“பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னிக் கொண்டான் கோலக்காவு கோயிலாக் கண்டான் பாதம் கையாற் கூப்பவே உண்டான் நஞ்சை யுலக முய்யவே”

என்று அருளுகின்றார். பெண்ணென்பது திருவருள், பெண்ணைப் பாகங்கொண்டதோடு பிறையைச் சென்னியிற் கொண்டதும் அருளே என்பதனைப் பிறிதோரிடத்தில், “முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி, முடியுடையமரர்கள் அடிபணிந்தேத்தப், பின்னிய சடைமிசைப் பிறைநிறைவித்த பேரருளாள னார் பேணிய கோயில்” “என்றும், பெண்ணைப் பாகம் கொண்டதும் உயிர்கட்கு அருள்செய்தற்கே என்பதை, “ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருணல்கிச், சேணின்றவர்க் கின்னம் சிந்தை செய வல்லான், பேணிவழிபாடு பிரியா தெழுந்தொண்டர் காணும்கடல்நாகைக் காரோணத்தானே” என்புழியும் விளக்கியருளுகின்றார்.