பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 201

என்று அருளுகின்றார். வினைப்பிணிப்பை விரைய நீக்கியவழியெய்தும் கேடுகருதி, பையநீக்குவராதலின், அதுகுறித்து, அவனை, “ஏத்தி வாழ்மின்” என அறிவுறுத்துகின்றார். பையநீக்குவதே அவரது பான்மை யென்பதனைப் பிறிதோரிடத்தும், “செய்ய மேனி வெளிய பொடிப்பூசுவர், சேரும் அடியார் மேல், மெய்ய நின்றபெருமான்’ (புகலூர்) என மொழிந்தருளுகின்றார். ஏத்துமிடத்தும் இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மின் என்கின்றார். “துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி, மறக்குமா றிலாதவென்னைமையல் செய்து மண்ணின்மேல், பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே’ என்ற திருப்பாட்டிலும், இழுக்கிய வழி, பிறக்குமாறு காட்டுதலும், இழுக்காவழி, பிறப்புவிட்டு இறக்குமாறு காட்டுதலும் உண்மையின், ‘இழுக்குகின்றதென்னை’ என்று வற்புறுத்துதல்

ITT.

இவ்வாறு, தழுவிட்டுத் தளர்ச்சி யெய்திய வினை, நீங்கற்குரிய பாகம் பெறுவதற்கு உரிய முயற்சி, அவனைவிடாது பயிலும் பயிற்சியே யாகும் என்பார்,

“மயிலார் சாயல் மாதொர் பாகமா எயிலார் சாய எரித்த எந்தை தான்

  • அடியார் மேல் நின்றவினை பையப் பரற்றுவர் என இயையும்.