பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


202 ஒளவை சு. துரைசாமி

குயிலார் சோலைக் கோலக் காவையே பயிலா நிற்கப் பாவம் பறையுமே”

என்று மொழிந்தருளுகின்றார். குயில்கூடிப்பாடி மகிழும்சோலை கூறவே, கோலக்காவில், அடியார் பலரும் சேரவிருந்து அவன் திருவருளைப் பாடுதல் பெற்றாம். அடியாரொடு பயிலுதல் வேண்டும். அல்லாதார் அஞ்ஞானத்தை யுணர்த்துவார் “உரை தளர்ந்துடலார் நடுங்காமுனம், நரை விடையுடை யானிடம் நல்லமே, பரவுமின் பணிமின் பணிவா ரொடே, விரவுமின் விரவாரை விடுமினே’ என நாவரசப்பெருமானும், ‘மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்விக்கும், சிறப்பிலார்தம் திறத்துச் சேர்வை - அறப்பித்துப், பத்த ரினத்தனாய்ப் பரன் நினைவினாலுணரும், மெய்த்தவரைமேவாவினை” என மெய்கண்ட தேவநாயனாரும் தெருட்டி யருளுதலால் இவ்வுண்மையை அறிகின்றோம்.

இத்தகைய பயிற்சியால் நீங்குதற்குரிய பக்குவம் பெற்று வரும் வினைகள், பின்னர், அவன் திருவடி ஞானத்தால் வெடிபட்டு வீற்று வீற்றோடிவிடும்; ஆதலால், அத்திருவடியை அடைந்து வாழ்மின் என அடுத்தபாசுரத்தில், நீங்கற்குரியவாய் வரும் வினை கள் அறவே நீங்கும் முறையைத் தெரிவிக்கின்றார்.

“வெடிகொள் வினையா விட்ட வேண்டுவீர், கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே"