பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 } ஒளவை சு. துரைசாமி

என்று பாடியருள்கின்றார். பாதம் நினைந்து தொழுமிடத்து, அதன் அழலொளி வினையிருள் எய்தாவகைக் கெடுத்தலின், அடியார்க்குத் துயர மில்லையென்பார், “பாதம் கைகளால் தொழலார் பக்கல் துயரமில்லையே” என்றார். அழகாய கழலான் அடிநாளும் கழலாதே விடலின்றித், தொழலாரவர் நாளும் துயரின்றித் தொழுவாரே” (நெய்த்தானம்) எனப் பிறாண்டும் இதனையே தெருட்டுவர்.

நிழல் மிக்க சோலையின், வண்டினம் தேனுண்டு பண்பாடும் எனவே, அவன் திருவடி நீழலில் பெரும் போகம் துய்க்கும் மகிழ்வால், அடியார்கள் அவன் திருப்புகழ் பாடுதல் பெறப்படும். நாவரசரும், பரமன் திருவடி செந்தேன் பொழியும் என்பதனை, ‘சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப்பொழிவன” என்றே மொழிந்தருளுகின்றார்.

இவ்வாறு, வினையியல்பும், அது பரமன் வழிபாட்டால் நீங்குமாறும், நம் ஆளுடைய அடிகள் வெளிப்படையாகவும், உள்ஸ்ரீத்தும் தெரிவித் தருளிய போழ்தும், சிலர்பலர், அவ்வினையியல்பை யுணர்ந்தும் அயர்ந்திருந்தனர். அவர்க்கு நல்லறிவு கொளுத்துவார் திருநீலகண்டத் திருப்பதிகத்தில் அவர்தம் கொள்கையை மறுத்துப் பரமனை வழிபாடு புரியுமாறு நன்கு தெருட்டுகின்றார்.

“அவ்வினைக் கிவ்வினையாம் என்று

சொல்லு மஃதறிவீர்,