பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 205

உய்வினைநா டாதிருப்பதும் உந்தமக்

கூனமன்றே,

கைவினைசெய் தெம்பிரான் கழல்போற்றுதும்

நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா

திருநீலகண்டம்”

என்பது அப்பாசுரம். இதன்கண், வினைமேற்பழி யேற்றி, தாம் நுகரும் பயன்யாவும் முன்வினையால் வந்தன என்பாரை நோக்கி, “அவ்வினைக் கிவ்வினை யாம் என்று சொல்லும் அதனை மட்டில் அறிந் திருக்கின்றீர்களே, அவ்வறிவால், அவ்வினையைக் கெடுத்தற்குரிய நெறியும் காண்டல் கூடும் என்பதை அறியா திருப்பது உமக்குக்குற்றமாகுமே” என்பார், ‘உய்வினை நாடா திருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே” யென்றார். கெடுத்தற்குரிய அந்நெறியும் வேறன்று; ஈதே என்றற்கு, “கைவினை செய்து எம்பிரான் கழல் ஏத்துதும்” என்றும், “அதுதவிர யாம் வேறு செய்தற்குரிய நெறியில்லோம்; ஏனெனில், நாம் அவ்வாண்டவனுக்கு அடிமை” என்பதனை வற் புறுத்த நினைத்து, “நாம் அடியோம்” என்றும், அச்செயலால் நாம் துாய சத்துப்பொருளாதலின், அசத்தாகும் செய்வினைகள் வந்து சேர்வது இல்லையாம்” என்பார், “செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா” என்றும், இதற்குச்சான்று “திருநீல கண்டமே” என்றும் தெருட்டியருளுகின்றார். “சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச்