பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 ஒளவை சு. துரைசாமி

சார்தரா சார்தரும் நோய்” என வள்ளுவப் பெருந்

தகையும் வழங்கியிருக்கின்றார்.

இதுகாறும் கூறியவாற்றல், வினையுணர்வின்

பயன் பரமன் திருவடியைப் பரவித் தொழுவதே

யன்றிப் பிறிதில்லை யெனத் திருஞானசம்பந்த

சுவாமிகள் தெருட்டியருளுகின்றார் என்பதாம்.

“பிறவியெனும் பொல்லாப்பெருங்கடலை நீந்தத் துறவியெனும் தோற்றோணி கண்டீர்-நிறையுலகின் பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன் தன்மாலை ஞானத் தமிழ்"