பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11

பட்டினத்துப் பிள்ளையார்

சைவத்திருமுறை பன்னிரண்டனுள் பதினோ ராந் திருமுறையிற் காணப்படும் நூலாசிரியன்மார் களான சான்றோர்களுள் பட்டினத்துப்பிள்ளை யாரும் ஒருவராவர். இவர் பாடியனவாகக் கோயில் நான்மணிமாலை, திருவிடைமருதுரர் மும்மணிக் கோவை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திரு வேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாவொருபது என ஐந்து நூல்கள் பதினோராந் திருமுறையில் உள்ளன. -

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் காவிரிப்பூம்பட்டினத்தில் இவர் தோன்றி வளர்ந்து வாழ்ந்தவர்; இவர், பிற்காலத்தே துறவு பூண்டபின் சான்றோர்களால் பட்டினத்துப்பிள்ளையா ரென்று வழங்கப்படுவாராயினர் (திருவிடை 30). இவர், காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த சைவ வணிகர் குடியில் கடல் வாணிகம் செய்து மிக்க செல்வம் பெற்ற செல்வரொருவருக்கு மகனாராவர். திரு