பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 இ. ஒளவை சு. துரைசாமி

வெண்காடருடைய தந்தை பெயர் சிவநேசர் என்றும் தாய் பெயர் ஞானகலாம்பை என்றும் கூறுவர்.

திருவெண்காடர், உரிய காலத்தில் திருமணம் செய்து கொண்டு, கடல் வாணிகம் செய்து, பெருஞ் செல்வராய் விளங்கினார். அவர்க்கு மருதவான னென்றொரு மகன் பிறந்து, பதினாறாண்டளவும் இருந்து, பின் இறந்து போனான். அதனால் கவலை மிகக் கொண்ட திருவெண்காடர், திருவிடை மருதூரிலிருந்து வறுமை மிக்கு வருந்திவந்த ஆதிசைவர் ஒருவருடைய ஆண்மகவை விலைக்கு வாங்கி மருதவாணனென்றே பெயரிட்டு வளர்த்து வந்தார். அவனும் அவருடைய உண்மை மகனாகவே வளர்ந்து சிறந்து கடல் வாணிகம் செய்து பெருஞ் செல்வம் ஈட்டித் தந்து, காதற்ற ஊசி யொன்றையும், “காதற்ற ஆசியும் வாராது காணும் கடைவழிக்கே என்றெழுதிய ஒலை நறுக்கொன்றையும் கொடுத்து விட்டு வெளிச் சென்று மறைந்து போனான். அதுகண்ட திருவெண்காட ருள்ளத்தில் துறவு பிறந்தது. அந்நாளில் அவரிடம் தலைமைக் கணக்க ராய்ச் சேந்தனார் என்னும் சான்றோ ரொருவர் இருந்தார். வெண்காடர் தமது பெருஞ் செல்வத்தைப் பொது மக்கட்கு வழங்கி விடுமாறு சேந்தனாரைப் பணித்துக் கையில் ஒடும் அரையில் கோவணமும் கொண்டு வெளியேறினார். மருதவாணன் பிரிந்த சின்னாட்களில் வெண்காடருடைய மனைவியாரும் காலமாயினர். வெண்காடருடைய தாய்மட்டில் உயிரோடிருந்ததனால், அவர்க்கு வேண்டிய ஏற்