பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 209

பாட்டைச் செய்துவிட்டு, சிவபெருமான் எழுந் தருளும் திருப்பதிகட்குச் சென்று பரவிவழிபடும் செயலை அவர் மேற்கொண்டார். வீடுதோறும் சென்று ஒட்டில் உணவிரந் துண்டனர். அவருடைய உறவினர், வேந்தனைக் கொண்டும் வேறு தக்கோரைக் கொண்டும் அவர் உள்ளத்தை மாற்ற முயன்றனர்; சேந்தனாரைச் சிறையிடுவித்தனர்; திருவெண்காடருக்கும் நஞ்சு கலந்த உணவளித்துக் கொல்ல முயன்றனர்; ஒன்றாலும் திருவெண் காடருடைய உள்ளம் மாறவேயில்லை.

திருவெண்காடர், திருவிடைமருதுரரில் சின் னாள் தங்கி இடைமரு திறைவனை வழிபட்டுக் கொண்டு வந்தார். அந்நாளில் அவருடைய தாயார் இறந்தனர்; அவர்க்குரிய இறுதிக் கடன்களைச் செவ்வே ஆற்றிவிட்டு மீளவும் திருவிடைமருதூர் சென்று சேர்ந்தார். அங்கே யிருக்கும்போது அவர் திருவிடைமருதூர் மும்மணிக்கோவையைப் பாடி னார். பின்பு அவர் சீர்காழி, தில்லை, காஞ்சிமாநகர், காளத்தி முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு வடநாடு சென்றார்.

வடநாட்டில் பத்திராசலப் பகுதியில் மாகாளம் என்னுமோர் ஊரை யடைந்து, ஒருநாள் இரவு அங்கேயிருந்த பாழ்ங்கோயிலொன்றில் நிட்டை கூடியிருந்தார். அந்நாளில் அப்பகுதியைப் பத்திரகிரி யென்னும் குறுநில மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய அரண்மனையில் களவு புரிந்த கள்வர்

த.செ.-14