பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 இ ஒளவை சு. துரைசாமி

சிலர், திருவெண்காட ரிருந்த கோயிலுக்கு வந்து, தாம் திருடிவந்த அணிகலன்களுள் பதக்கமொன்றை யெடுத்து, அங்கிருந்த கழுத்திலிட்டுச் சென்றனர். கள்வரைத் தேடிவந்த காவலர் பட்டினத்துப்பிள்ளை யாரைக் கண்டு கள்வரெனக் கருதிக் கைக்கொண்டு சென்று கழுவேற்றத் துணிந்தனர். கழுமரத்தைப் பிள்ளையார் நோக்கினர். உடனே அஃது எரிந்து சாம்பராயிற்று. அதுகண்டு வியந்த காவலர் வேந்த னுக்குத் தெரிவித்ததும், பத்திரகிரி விரைந்தோடிவந்து பிள்ளையாரைக் கண்டு துறவு பூண்டு அவர்க்கு மாணவராய் அவர் நிழல்போல் தொடர்ந்து வரலா னார். இருவரும் திருவிடைமருதூரடைந்து இறை வனை வழிபட்டு வந்தனர். வருகையில் பத்திர கிரியாரை நாயொன்று சுற்றிக் கொண்டு திரிந்தது.

திருவிடைமருதூரில், ஒருநாள், பசியுற்று வருந்திய ஒருவர் பட்டினத்துப்பிள்ளையாரைக் கண்டு உணவு வேண்டி நிற்க, அவர் பத்திரகிரி யாரைக் காட்டி, அந்தச் சமுசாரியிடம் செல்க’ என்றார். அது கேட்டதும், பத்திரகிரியார், தம்பால் இருந்த ஒட்டையெடுத்து, இதுவும் இந்த நாயுமன்றோ என்னைச் சமுசாரியாக்கின என்று வருந்தி நாய்மேல் எறிந்தார். அது நாயின் மண்டையில்படவே நாய் இறந்து போயிற்று. சின்னாட்குப் பின் பத்திரகிரியும் இறைவன் திருவடியடைந்தார்.

முடிவில், பட்டினத்து அடிகள் திருவொற்றி யூர்க்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு