பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 213

னின்றும் அகப்பொருளை நாடிக் காணும் முறை இவர் பால் அமைந்திருப்பதும், தசையைப் புண்ணெனத் திருவள்ளுவர் கூறியது கொண்டு, தாமும் புண்ணெனக் குறிப்பதும் குறிக்கத்தக்கன வாகும்.

இவ்வண்ணம் திருவருள் வாழ்வும் உலகியற் காட்சியும் இனிது பெற்று இறைவனைச் சிந்தையிற் கண்டு விளங்கும் பிள்ளையார், ஏனையோரைக் கண்டு மன மிரங்கி, எம்மனோர்கள் இறைவனாகிய கனியை) இனிதின் அருந்திச் செம்மாந்திருப்பச் சிலர் இதின் வாராது, மனத்தைப் பாழாக்கி, பொய்யும் பாவமும் கொடுமையும் துன்பமும் பெருக்கி, “மரணம் பழுத்து நரகிடைவீழ்ந்து, தமக்கும் பிறர்க்கும் உதவாது, இமைப்பிற்கழியும் இயற்கையோ ராய்” (திருவிடை 10) உள்ளனர் என இரங்கிக் கூறுகின்றார்.

இனி, இவர்க்கு மாறாகக் கடுந்தவம் மேற் கொண்டு உடலை வருத்தும் பிறரையும் காண் கின்றார். அவர்கள் மனைவி மக்களைத் துறந்து காடு மலைகளையடைந்து மழையென்றும் வெயிலென்றும் பணியென்றும் பாராது நீர் பலகால் மூழ்கி, நிலத்திற் கிடந்து சடைபுனைந்து, உடை துறந்து உண்ணா நோன்பு கொண்டும், நாயும் கிழங்கும், காற்றுதிர் சருகும் உண்டும் இயல்பாகவே தனர்.தற்குரிய யாக்கையைத் தளர்வித்து “அம்மை முத்தியடைவதற் காகத், தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்” (திருவிடை