பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


214 ஒளவை சு. துரைசாமி

19). இவ்வாறன்றி, இல்லிருந்து நல்லன நுகர்ந்து, கொள்வன கொண்டு கொடுப்பன கொடுத்துப் பூசுவது பூசி, புனைவன புனைந்து “ஐந்து புலன்களும் ஆரஆர்ந்து, மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்து. இவ்வகை” யிருந்தும், திருவைந்தெழுத்தை மறவாது சிந்தையைச் சிவன்பால் சேர்த்தியிருப்பார்க்கும் கடுந்தவம் செய்வோர் பெறும் பேரின்பம் இனிது எய்தும் என்று கூறி, இதனை விளக்குவாராய், “வல்லாவொருவன் கைம்முயன்றெறியினும், மாட்டா வொருவன் வாளா எறியினும், நிலத்தின் வழா அக் கல்லே போல, நலத்தின் வழார் நின் நாமம் நவின்றோரே (திருவிடை 19) என்று கூறுவர். பிறிதோ ரிடத்தில், இவ்வுலகம் நின்னுடையது. இதன் கண் நிகழும் நன்மை தீமைகள் யாவும் நின்னுடையவே; ஆதலால், இதன் கண் வாழும் யான்.

“பத்தி யென்பதோர் பாடு மின்றிச் - சுத்தன் ஆயினும் தோன்றாக் கடையே, னின்னை இறைஞ்சில னாயினும் ஏத்தில னாயினும் வருந்தில னாயினும் வாழ்த்தில னாயினும் கருதி யிருப்பன் கண்டாய்” (திருவிடை 28) என்று கூறுவதும், தாம் இறைவன் திருவருள் வழி நிற்றலால், தம்செயல் யாவையும் இறைவன் தன் செயலாய் ஏன்று கொள்ள வேண்டுமெனவும், தன்னை நினைத்தற்குரிய நெறியில் நினைக்குமாறு செய்ய வேண்டுமெனவும் வேண்டுவராய் மனம் மருண்டு புன்மையினினைத்துப் புலன் வழிப்படரி