பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் , 215

னும் நின்வயின் நினைந்தே மாகுதல் நின்வயின். நினைக்குமோ நினைக்கப்பெறுதல் அனைத் தொன்றும் நீயே யருளல் வேண்டும்” (கோயில், 32) என்று கூறுவதும் பிறவும் அவர் சீவன் முத்தராய் வாழ்ந்த குறிப்பைப் புலப்படுத்துகின்றன.

இத்தகைய இயல்பினையுடையார்க்கு இறை வன் தொண்டராய்த் தொண்டு படுவதில் பெரு விருப்பும் இயற்கையாக வந்து அமைவனவாம். பெருவிருப்பத்தை “நின் சீரடியார் தம் சீரடியார்க்கு, அடிமை பூண்டு நெடுநாட்பழகி முடலை யாக்கை யொடு புடைபட்டொழுகி அவர் கால் தலை யேவல் என் நாய்த்தலையேற்றுக் கண்டது காணினல்லது ஒன்று உண்டோ மற்றெனக்குள்ளது பிறிதே’ (திருவிடை 7) என்பதனாலும், பெருமிதத்தை, “அம்பலக் கூத்தனுக்கு அன்பு செய்யா மிண்டர் மிண்டித்திரிவார். எனக்கு என்இனி நான் அவன் தன், தொண்டர் தொண்டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே” (கோயில் 38) என்பத னாலும் வெளிப்படுத்துகின்றார்.

இப்பெற்றியோர்க்கு எதன்பாலும் விருப்பு வெறுப்புக் கிடையாது. அவர்கள் துறக்க வாழ்வும் நரக வாழ்வும், பிறர் கண்டு தம்மை நல்லரெனினும் தீயரெனினும், செல்வ வாழ்வும் வறுமை வாழ்வும் குன்றா இளமையே எய்தினும் இன்றே இறக்கலுறி னும் எல்லாம் ஒன்றாய்க்கருதி, “வேண்டலு மிலனே வெறுத்தலுமிலனே’ (கோயில் 35 என்று இருப்பர்;