பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 217

முதலியவற்றைச் சுறா மீனாகவும், குடலைப் பாம்பாகவும், தசை யெலும்புகளைத் திடலாகவும், உடம்பைக் கடலாகவும், துப்புரவைச் சுழிகளாகவும், இறைவன் திருவருளை நாவாயாகவும், ஆர்வத்தைப் பாயாகவும், நிறையைக் கயிறாகவும், ஒருமை யுணர்வைக் கலத்தையியக்கும் பொறியாகவும், காமத்தைப் பாராகவும், சுருங்காவுணர்ச்சியைத் துடுப்பாகவும் (ஒற்றி 8) உரைப்பதும் இவர்பால் பெருகக் காணப்படுகின்றன.

இவர் காலத்தே கடலிற் செல்வோர் வட மீனைத் திசை விளக்காக மேற்கொண்டிருந்தமையை தூமச் சோதிச்சுடர்க் குற நிறுத்தி (ஒற்றி 8) என்றும், பொறிகள் அமைத்து வங்கத்தைச் செலுத்தின மையை, மன்னிய வொருமைப் பொறியினை முறுக்கி (ஒற்றி 8) என்றும், இருஸ்ரீபவ்வத் தெந்திரங்கடா அய், துன்று திரைப்பரப்பிற் குன்று பார்த் தியங்கியும்” (கோயில் 20) என்றும் வருவன வற்புறுத்துகின்றன. அந்நாளில் மக்கட்குத் திருமணம் செய்யும் வகையில் பெற்றோரே முற்பட்டு நின்றனர். மகட்குத் தக்க மணமகனைத் தேர்ந்து மணஞ்செய்து வைப்பது மகளைப் பெற்றோர் கடனாகும்; இதனை “தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த நன் மனைக் கிழத்தி” இடைமரு 7) என்பதனாலறியலாம். அத்திருமணக் காலத்தில் வந்து கூடும் செல்வர் மணமக்கட்கு மொழி யெழுதுவதாகிய வழக்கம் அடிகள் காலத்தே தோன்றி விட்டது. “திருமணம்