பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் : 21

அத்தெய்வங்களின் தொடர்பு சமய வாழ்வில் சிறந்து நின்றது. மக்களுயிர்களுள்ளும் அல்லன கடிந்து நல்லனவே புரிந்தவை மறுமையில் தெய்வங்களா யினவும் உண்டு இவ்வாற்றால் தெய்வங்களைப் பற்றிப் பல வேறு வரலாறுகள் சமயத்துறையில் காணப்பட்டன. அவற்றை இந்நாளில் புராண வரலாறுகள் என்பது வழக்கம். மக்கள் வாழ்க் கையைப் பொருளாகக் கொண்டெழுந்த பழந்தமிழ் இலக்கியங்களில் தெய்வங்கள் சார்பான புராண வரலாறுகள் பல உளவாயின.

குறிஞ்சிநிலத் தெய்வமான முருகனைப் பற்றிய வரலாறுகளில், அம்முருகன் தாமரைப்பூவில் பிறந்தான் என்பதை ‘நிவந்தோங்கு இமயத்து நீலப்பைஞ்சுனைப், பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்’ என்று பரிபாடல் முதலிய நூல்கள் குறிக்கின்றன. கடலிடத்தே இருந்து குறும்பு செய்து உயிர்களை வருத்தித் திரிந்த சூரபன்மாவின் காவல் மரமான மாமரத்தைத் தடிந்து அவனையும் கொன்று முருகன் மேன்மையுற்றான் என்பதை, -

“நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி

அணங்குடை யவுனர் ஏமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்

கடுஞ்சின விறல்வேள்”

என்று பதிற்றுப்பத்தும்