பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 இ ஒளவை சு. துரைசாமி

அண்ணாமலை, வல்லம், தமாற்பேறு, பாசூர், அழுந்துார், பெரும்பேறு, ஒற்றியூர், கச்சியேகம்பம், திருவோத்துரர், திருவாமாத்துார், புலிவலம், வில்வலம், திருப்பனங்காடு, கொச்சை, மாகறல், காவை, கச்சூர், திருக்காரிகரை, திருவான்மியூர், திருவூறல், திருப் போந்தை, முக்கோணம், திருவாலங்காடு முதலியன குறித்தோதப்படுகின்றன. இவற்றுள் சேரக் கூறற் பாலவாகிய தில்லையையும் காளத்தியையும் தனியே நிறுத்தி, “நடனம்பிரான் உகந் துய்யக் கொண்டா னென்று நன்மறையோர், உடன்வந்து மூவா யிரவரிறைஞ்சி நிறைந்த உண்மைக், கடனன்றி மற்றறியாத் தில்லையம்பலம் காலத்தியாம், இடம் எம்பிரான் கச்சியேகம்பமே'(4) என்று சிறப்பித்துக் கூறுகின்றார். கயிலை யெழுந்தருளுமிடமும் தில்லை நடம்புரியுமிடமுமாயினும், “கயிலை புல்லென விசும்பு வறிதாக இறைவன் தில்லையில் நடம் புரிதலால் (கோயில், 32) தில்லையாத் தனித்தும், கயிலைமலை யெனப்படும் (A.R. 160 of 1922) சிறப்புடைமையின் திருக்காளத்தியைத் தில்லை யொடு சார்த்தியும் கூறினார் போலும்.

இனி, அவர் வழங்கும் பழமொழிகளைக் காண்டல் வேண்டும். பொற்குன்றம் சேர்ந்த காக்கை யும் பொன்னாம் என்பதும், இரத குளிகையால் செம்பும் பொன்னாம் என்பதும், கருடதியானிக்குக் கண்ணே மருந்து என்பதும், இரவி முன் இருள் நில்லாது என்பதும் பழமொழிகள்; இவற்றை