பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 221

‘ஏர்தரும் பொற் கிரிசேர் கருங்கொடியும், பொன்னிறமா மெனச் சொன்ன தொன்மொழியும், ஏதமில் நிறைமதிச் சீதளநிலவால், ஆருமெய்யுருப்பம் தீருமென்பதும், மொழிதரு மிரதகுளிகைதற் சேர்ந்த காளிமச் சீருண நீளியற்கணக, மாமெனக் கூறும் தோமறுமொழியும், கருட தியானம் மருடபவந்தோர், நோக்கினில் தவிரும் தீக்கடுவென்றலும், ஆயிரங் கிரணத் தலர் கதிர் முன்னம் பாயிருள் கெடுமெனப் பகர் பழமொழியும், அங்கண்மா ஞாலத் தெங்கணு மொப்ப இயலும்” (கழுமல. 19) என்பர். கற்பசுவைக் கறப்பவரில்லை, எட்டிக் கணிக்கு ஏணியிடார், அரிசிவேண்டி உமி குற்றுவாரில்லை, வெறுங் களருழுது விதை விதையார் (கழுமல. 22), தானே விழுவார் மேல் பார மேற்றலாகாது (திருவிடை 5, முகம் பாகம் பண்டமும் பாகம் (திருவேகம்ப. 15 என்பன முதலிய பழமொழிகளும் பிள்ளையார் பாட்டில் காணப்படுகின்றன.

பட்டினத்துப்பிள்ளையார் பெருஞ்செல் வத்தைத் துறந்த அருந்துறவியென்பதோடு முத்தமிழ்ப் புலமைபெற்ற வித்தகரென்பதை அவருடைய பாட்டுக்களே காட்டுகின்றன. மக்களுயிர் ஒவ்வொரு கணமும் இறக்கும்நிலையில் இருந்து கொண்டே சிற்றின்பம் விழைந்து விற்கிற்தென்பது கண்டு, “நஞ்சு சூழ்பகுவாய் வெஞ்சினமாசுணம், தன்முதன் முருக்க நென்முதற் சூழ்ந்த, நீர்ச்சிறுபாம்புதன் வாய்க்கெதிர் வந்த, தேரையை வவ்வியாங்கு யான்முன், கருவிடை