பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


222 ஒளவை சு. துரைசாமி

வந்த வொருநாள் தொடங்கி மறவாமறலிமுன் பிறழ்பேழ்வாய். அயிற்றலையன்ன எயிற்றிடைக் கிடந்து’’ (கோயில் 8) வருந்துகிறேன் என்பது, மக்களைப்போலப் பிறந்திறந்துழலும் வானவர் முதலிய சிறு தெய்வவழிபாட்டை இகழ்ந்து விலக்கக் கருதிய பிள்ளையார் வழிபடும்மக்களை பார்த்து, “புறவார்பசும்புற் கறவாக்கற்பசு, வாயிடைச்செருகித் தூயநீருதவி, அருஞ்சுவைப்பால் கொளப் பெருஞ் சுரை.வருடும் பேதையர்” (கழுமல. 22) என்பது முதலிய உவமைகளை எடுத்தோதுவதும் பேரருட் பெருங்கடலாக இறைவன் இருப்ப, அவன் அருட்பேற்றுக்கிலக்காகாத மக்கள் செயலுக்கு இறைவன்பால் குற்றமில்லையென்பது விளக்க, “முறியாப்புழுக்கல் முப்பழங்கலந்த, அறுசுவை யடிசிலட்டினி திருப்பப், புசியாதொருவன் பசியால் வருந்துதல், அயினியின்குற்றமன்று வெயிலில்வைத்து, ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட்டிருப்ப, மடாஅவொரு வன் விடாஅவேட்கை, தெண்ணிர்க்குற்றமன்று கண்ணகன்று, தேன்துளி சிதறிப் பூந்துணர்துறுமி, வாலுகங்கிடந்த சோலைகிடப்ப, வெள்ளிட வெயிலிற் புள்ளிவியர்பொடிப்ப, அடிபெயர்த்திடுவா னொருவன், நெடிதுவருந்துதல் நிழல் தீங்கன்றே” (திருவிடை 16) என்பதும் பிறவும் அவரது புலமை வளத்தின் பொற்பை விளக்குவனவாம்.

சிவபெருமான் இன்னவுரு இன்ன நிறம் என்று அறியவாராத முழுமுதற் பெருள்! “குறி குணம்