பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 223

கடந்தவன், உறைபொருள் எங்கணும் நிறைபரி பூரணம், அந்தமாதி முந்தையே தவிர்த்த அனாதி முத்தன், அளவையின் அடங்காது ஒளிர் சுகம்” கழுமல. 28); சராசாரமனைத்தும் அவனிடையே தோன்றி அவனிடையே யடங்கும் (கோயில் 24), எல்லாம் தன்னிடைத் தோன்றித் தன்னிடையே ஒடுங்கினும், சிவபெருமான் தான் பிறிதொன்றில் தோன்றாது வேறாய் நிற்பன் (திருவிடை மும், 22; ஒற்றி, 4); வேறாய் இருப்பினும், “ஏழுலகாகி எண்வகை மூர்த்தியோடு ஊழிதோ றுழி எண்ணிறந் தோங்கி,” (ஒற்றி எவ்வகைப் பொருளினும் ஒன்றாய் அவ்வப் பொருளாகவும் இருப்பன். ஒன்றாக இருப்பவன் வேறாய் நிற்பது, ஒன்றோடொன்றொவ்வாது வேறு பட்ட உயிர்கள் தத் தம் எல்லையில் இனிது ஒழுகப் பண்ணுதற்கு என்பாராய், “ஒவ்வாப் பன்மையுன் மற்றவர் ஒழுக்கம் மன்னிய. விரவியும் வேறாய் நின்றனை” (ஒற்றி 4) என்று விளக்குகின்றார். இப்பரம் பொருள் இங்ஙனம் உலகுயிர்களோடு ஒன்றாயும், வேறாயும் இருக்குமாயினும், மூலமும் நடுவும் முடிவும் இன்றிக் காலங் கடந்து நிற்கும் கடவுள் என்று எடுத்து,

“உளக்கணுக் கல்லா தூன்கணுக் கொளித்துத் துளக்கற நிமிர்ந்த சோதித் தணிச்சுடர் எறுப்புத் துளையி னிருசெவிக் கெட்டா துறப்பினின் றெழுதரு முள்ளத் தோசை வைத்த நாவின் வழிமறித் தகத்தே