பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஒளவை சு. துரைசாமி

“அவுனர் நல்வலம் அடங்கக் கவிழினர்

மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேற் சோய்”

என்று முருகாற்றுப் படையும் பிறவும் குறிக்கின்றன. “குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின், மடவால் வள்ளியொடு நகையமர்ந்த” முருகனைச் சிறப் பிக்கும் சான்றோர், வள்ளியை, ‘முருகுவுணர்ந்தி யன்ற வள்ளி” என்றும், அவளுடைய பெற்றோரைக் “குறிஞ்சிக்குன்றவர் மறங்கெழு வள்ளி தமர்” என்றும் எடுத்துரைக்கின்றனர்.

முல்லை நிலத் தெய்வமான மாயோன், கண்ன னால் முல்லை நிலத்து ஆயரிடையே யமுனைக் கரையில் விளையாடிய வரலாறு,

.. “வடாஅது, வண்புன் தொழுகை வார்மண லகன்றுறை அண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல்”

என்றும், கஞ்சன் விடுப்பக் குதிரை வடிவில் வந்த அசுரனை வென்ற செய்தியை,

“காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகைகண்டை

மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை வாய்பகுத்திட்டுப் புடைத்த ஞான்று இன்னன்கொல் மாயோன் என்றுஉட் கிற்றுஎன் நெஞ்சு” என்றும் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. இவ் வாறே மருதத்துக்குரிய தெய்வமான இந்திரன்,