பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ 229

இவ் வண்ணம் உணர்த்தப்படும் சிவ ஞானம் கைவரப் பெற்றவர், யாது குறித்தும் எவர்க்கும் அஞ்சுதலின்றி, மனைவி மக்கள் முதலிய சுற்றத் தொடர்பும் செல்வமும் பிறவும் பொருளென. நினையாது திருவருளே நினைந்து இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் எண் வகைச் சித்தியும் தாமே வந்தபோதும் அவற்றை மறுத் தொதுக்கிக் கீளும் கோவணமும் உடுத்து ஒடொன்றைக் கையிலேந்தி இரந்துண்பதும், தரையிற் படுத்துறங்குவதும் சால்பு குன்றாராய், மன்னுயிரனைத்தையும் மகவெனக் கருதி ஒக்கப்பார்க்கும் உயர் நிலைத்தொண்டராய் விளங்குவர்; அவர் வாழ்வின் முன் உலகியலிற் பெருஞ் செல்வம் பெற்று வாழும் பெரு வாழ்வு ‘குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப் பிரளயச் சலதியும் இடைமருது. 7) போல ஒவ்வா இயல்பின தாம். இச் சான்றோர். தாம் பெற்று மகிழும் அருள் ஞானத்தால், தம்மை யுணர்ந்து, தம்மை யடிமை யாகவுடைய தலைவனாகிய சிவனை யுணர்ந்து ஏனை எல்லோரையும் இனி துணரும் சிவ ஞானச் செல்வராவர். ‘தெய்வத் திருவருள் கை வந்து கிடைத்தலின், மாயப் படலங் கிறித் துய, ஞான நாட்டம் பெற்ற பின்யானும், நின் பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும், என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன், நின்னிலை யனைத்தையுங் கண்டேன் (திருவிடை 13) என்று தாமும் அச் சிவ ஞானக் காட்சி பெற்ற சிறப்பைப் பட்டினத்தார். எடுத்துரைக்கின்றார்.