பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


230 இ. ஒளவை சு. துரைசாமி

பட்டினத்தார் திருவருள் நாட்டம் பெறு முன்பெல்லாம் இறைவனை வேண்டுமிடத்து, பேதையேன் பாசத் தீவினை யகற்றித் திருவருட் செல்வம் பெருகுமாறுதவி அளித்தருள் (கழுமல. 19) என வேண்டினர். அக் காலத்துக் கல்லா மனத்துப் புல்லறிவு தொடர இல்லன உள்ளனவாயும் உள்ளது காணப்படாமலும் காட்சி யளித்தன; ‘திருவருள் நாட்டம் கருணையிற் பெறலும் யாவையும் பொய்யெனத் தோன்றின; சிவ பரம் பொருளே மெய்யெனத் தோன்றக் கண்டார். அதனை ஒவியப் புலவன் சாயல் பெற எழுதிய, சிற்ப விகற்ப மெல்லாம் ஒன்றித், தவிராது தடவினர் தமக்குச், சுவராய்த் தோன்றும் துணிவு போன்றனவே! (கழுமல.10) என்று விளக்குகின்றார்.

இறுதியில் அவர் ஞான நெறியில் முதிர்ந்து திருவருட் பெருஞ் செல்வராய்த் திகழ்ந்த காலையில், திருவொற்றியூர் இறைவனை நோக்கி, சேர்விடம் இன்னதெனத் திறப்படநாடி யடைதற்கு அரியவனே, நாடற்குரிய வாயில் எல்லாவற்றாலும் நாடினேன்; இனிச் செய்வதொன்று மறியேன் என்று செயலற் றொழிகின்றார். அப்போது அவர், பெற்ற தாய் சேய்மையிலிருப்பினும் அழுத குழவி பாலுண்பது இயற்கை; அவ் வியல்பு தானும் அறியாது எண்ணில் ஊழி பிறவியின் மயங்கி வாய்தல் (வாயில்) அறியாது மயங்கினேன்; கண்ணிலாக் குருடர்கண் பெற்றாங்கு நின்திருவருள் நாட்டம் பெற்றேன்; என்னை இப்