பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 : ஒளவை சு. துரைசாமி

வந்ததென மயங்கி ஆடவரும் மகளிரும் கூடியின்புறு வர் (கழுமல. 28) எனவும் கூறுகின்றார். திருவேகம்ப முடையார் திருவந்தாதியில் காஞ்சிமா நகரையும் அதனைச் சூழ்ந்த கச்சி நாட்டையும் பாராட்டி அந்நாட்டின் நீர் நில வளங்களைச் சிறப்புற எடுத்தோதுவர்; தேன் முரல விளங்கும் தடம் பொழிலும் (3) வன்மையிற் குன்றா மதிலும் (10) தடங் கமலம் பூங்குடை கொள்ளும் புனல் வயலும் (5, பிறவும் கொண்ட காஞ்சிமா நகர், அமராவதிக்கு நேராம் (86) என்று வியந்துரைப்பார். இவ்வாறே திருவொற்றியூர், “இரு நில மடந்தைக்கு முகமெனப் பொலிந்த ஒற்றிமா நகர்” (ஒற்றி.) என்பது முதலாகப் பல இனிய சொற்றொடர்களால் சிறப்பித் துரைக்கின்றார்.

இனி, பட்டினத்தடிகளுடைய பாட்டினைப் படிக்குங்கால் பண்டை நூல்களின் கருத்துக்களும் சொற்களும் படிப்போருள்ளத்திற்றோன்றி அவ ருடைய பரந்த கல்வி நலத்தைப் புலப்படுத்துகின்றன. “எழுத்தி னுறழாது வழுத்து பொருளின்றிக், குறிப்பொடுபடாது வெறித்த புன் சொல்லே, யாயினும் பயந்த தஞ் சேயவர் சொலு மொழி, குழலினும் யாழினு மழகிதா மது போல்” (கழுமல. 28) என்ற இது, “யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா, பொருளறி வாராவாயினும் தந்தையர்க்கு, அருள் வந்தனவாற் புதல்வர் தம் மழலை” (புறம், 92) என்ற புறப்பாட்டையும், “குழலினிது யாழினிது என்ப