பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 237

தம் மக்கள், மழலைச் சொற்கேளாதவர்” (குறள்) என்ற திருக்குறளையும், “நெடுநீ ரென்னப்படுநெடு நாணில், தங்கிய மடியெனும் நங்குரம் சேர்த்தி” (கழுமல.16) என்பது ‘நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்” (குறள்) என்னும் திருக்குறளையும், “அடியொன்று பாதல மேழிற்கு மப்புறம் பட்டது இப்பால் முடியொன்று இவ் வண்டங்களெல்லாங் கடந்தது” (கோயில். 6) என்பது “பாதாள மேழினுங் கீழ்ச்சொற்கழிவு பாத மலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே” (திருவெம்) என்ற திருவாசகத்தையும், ‘அறிவும் சிந்தையும். சுவை யொளியூ றோசை நாற்றந் தோற்றம், என்றிவை முதலா விளங்குவவெல்லாம் ஒன்ற நின்னடிக்கே ஒருங்குடன் வைத்து, நின்றனன் தமியேன்” (ஒற்றி.9) என்பது, “எண்ணமே யுடல் வாய் மூக்கொடு செவி கண் என்றிவை நின்கனே வைத்து, மண்ணின்மேலடியேன் வாழ்கிலேன் கண்டாய்” (வாழா) என்ற திருவாசகத்தையும் நினைப்பிக் கின்றன. இவ்வாறே “நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்” (கோயில், 8) எனத் தொடங்கும் பகுதி திருஞானசம்பந்தருடைய, “செடி கொள் நோயாக்கை யம்பாம்பின் வாய்த் தேரை” (திருவாரூர்) என்ற திருப்பாட்டை நினைப்பிக்கின்றது.

இனி, புலன்களைந்தனையும் அடக்க வேண்டு மெனவுரைத்த பண்டைச் சான்றோர்கள், அவற்றால் உண்டாகும் கேட்டினை நம் பட்டினத்தடிகளைப்