பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 இ. ஒளவை சு. துரைசாமி

போல் எடுத்துக்காட்டி வற்புறுத்தியோர் எவரு மில்லை. இதனை, “அழுக்குடைப் புலன் வழி இழுக்கத்தி னொழுகி, வளைவாய்த் தூண்டிலி னுள்ளிரை விழுங்கும் பன் மீன் போலவும் (சுவை) மின்னும் விளக்கத்து விட்டில் போலவும் (ஒளி) ஆசையாம் பரிசத்தி யானை போலவும் (ஊறு) ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும் (ஓசை), வீசிய மணத்தின் வண்டு போலவும் (நாற்றம்) உறுவ துணராச் செறுவுழிச் சேர்ந்தனை” (கோயில் 28) என வருவதனாலறியலாம்.

இறைவனுடைய ஆணைக்கு “விரையாக் கலியெனும் ஆணை” (கோயில் 4) என்று பெயர் கூறுவர்; இது திருமாணிகுழி, திருப்புறம்பயம் கல்வெட்டுக்களிலும் காணப் படுவது. தில்லைவாழ் அந்தணர்கள், சிவபெருமான் நடனம் உகந்து உலகுயிர்கள் உய்யுமாறு அதனை மேற்கொண்டா னென்ற காரணத்தால் தில்லையில் நிறைந்திருக் கின்றன (திருவேகம்ப 47) ரென்றும், அதனால் அவர்கள் தில்லைக் கூத்தப் பெருமானை “வாழ் வாகவும் தங்கள் வைப்பாகவும்” (கோயில் 34) வணங்குகின்றார்கள் என்றும் இயம்புகின்றார். அவ்வந்தணர்கள் தில்லைப் பெருமானை இன்றும் தங்கட்கு வாழ்வாகவும் வைப்பாகவும் கருதி வழிபடு கின்றனரென்பது அறிந்து இன்புறத் தகுவதொன்று.

திருவேகம்ப முடையார் திருவந்தாதியின் இறுதியில் தாம் பாடிய அந்தாதியின் செய்யுட்