பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 239

டொகை நூறு என்று கூறுவாராய், “தமக்கு அன்பது பெற்றுப் பதிற்றுப்பத்துப் பாடி வைத்தார் பரவித் தொழுதா மவர் பாதங்களே’ என்றும், இதற்கு அவையடக்காக, “போதம் பொருளாற் பொலியாத புன்சொற் பனுவல்களும், வேதம் பொலியும் பொருளாமெனக் கொள்வர் மெய்த் தொண்டரே” (100) என்றும் கூறுவர். இவ்வாறு தொகை கூறுவதும் அவையடக்கத்தை நூலின் இறுதியிலுரைப்பதும் ஆகிய செயல் வகைகள், இவர்க்குச் சில ஆண்டுகள் முன்பிருந்த சேரமான் பெருமாளிடத்தும் காணப் படுதலின், இவை அக்காலத்து வழக்கம் போலும் என எண்ணவேண்டியிருக்கிறது.

இவர் காலத்தில் இவர்பால் தலைமைக் கணக்கராயிருந்த சேந்தனார் தில்லையிலிருந்து திருத்தொண்டு பல புரிந்து, திருவிசைப்பா திருப் பல்லாண்டுகளைப் பாடி இறைவன் திருவடி யடைந்தனர். பத்திரகிரியார் புலம்பல் எனப்படும் பாட்டுக்கள் பல பத்திரகிரியார் பேரால் வழங்கு கின்றன.

இறைவன் ஆணைக்கு விரையாக் கலியென்று பெயரென்பது முதன் முதலில் பட்டினத்துப் பிள்ளை யாரால் குறிக்கப்படுகிறது. பின்பு இரண்டாங் குலோத்துங்கன் காலத்தில் திருமாணிகுழி, திரு. வதிகை, திருப்புறம்பயம் முதலிய இடங்களில் உள்ள கல்வெட்டுக்களில் வழங்குவதாயிற்று. இக் கல் வெட்டுக்கள் வேந்தன் ஆணையைத் திருவாணை