பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


240 இ. ஒளவை சு. துரைசாமி

யெனவும் கோயிலார் ஆணையை விரையாக் கலியாணை யெனவும் இவ்வாணை பிழைத்தாரை முறையே ஊர்ச்சபையாரும் அடியார்களான ஆண்டார்களும் முறை செய்வரெனவும் திருமாணி குழிக் கல்வெட்டொன்றால் (S.I.I. Vol. VII.785) அறிகின்றோம். திருப்புறம்பயத்தில் “விரையாக் கலிப்பெருந்தெரு’ (Rajendra l) என்றொரு தெருவுண்டென அவ்வூர்க் கல்வெட்டு (A.R. 153 of 1932) கூறுகிறது. திருவிரையாக் கலி திருக்கண்ணப்ப தேவர் ஸ்ரீபாதம் (S.1.1. Vol. VIII. 319) எனத் திருவதிகைக் கல்வெட்டுக் (குலோத் II) கூறுகிறது. உத்தம சோழன் கல்வெட்டொன்று விரையாக் கலி யென்றும் நிறைகோலைக் குறிக்கிறது (திருப்புறம் பயம்).

திருஞான சம்பந்தர் முதலிய மூவரையும் இவர் முத்திறத்தடியர் என்றது கொண்டு பிற்காலக் கல்வெட்டுக்கள் “முத்திறத்தார்” (S.1.1. Vol. No.225) என்றும், திருப்புறம் பயம் கல்வெட்டொன்று “முத்திறத் தடியர்” (343 of 1927) என்றும் கூறுகின்றன.