பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12

திருப்பாசுரப் பேருரை விளக்கம்

கடவுள் வாழ்த்து

செம்பொ னம்பலத் தெம்பெரு முதல்வன் விருப்பார் மலரடி பரவுதும் திருப்பா கரப்பொருள் தேர்தற் பொருட்டே.

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருப்பாசுரம்

“வாழ்க அந்தணர் வானவ ரானினம், வீழ்க தண்புனல், வேந்தனு மோங்குக, ஆழ்க தீய, தெல்லா மரனாமமே சூழ்க, வையக மும்துயர் தீர்கவே.” என்பது பாசுரம். இஃது என்றுதலிற்றோ எனின், திருந்தா அமணர்தம் தீநெறிப்பட்டுத் திகைத்துநின்ற தென்னவன் தெரிந்துய்தற்பொருட்டு,

“உலகியல் வேதநூல் ஒழுக்க மென்பதும் நிலவு மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும்” உணர்த்துதல் நுதலிற்று. அஃதாவது வேதங்களிலும் ஆகமங்களிலும் விதிவிலக்குகளால் நுவலப்படும்

த.செ.16